Advertisment

பெயரோ மசாஜ் சென்டர்; நடப்பதோ பாலியல் தொழில் - அதிர்ச்சியில் போலீசார்

kumbakonam thiruvidaimaruthur incident police shocked 

கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதியில் மசாஜ் சென்டர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் செயல்பட்டு வரும் சிலநிறுவனங்களில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைஉறுதி செய்துகொண்ட திருவிடைமருதூர் ஏஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான காவல்துறையினர், திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில், மஜாஜ்சென்டர் நடத்தி வரும் இடத்தைவாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. மேலும், அந்த மசாஜ் சென்டரில் தரகராக செயல்பட்டு வந்த தாமஸ் என்பவரிடம் விசாரணை செய்ததில், "எங்களுக்கு இங்க மட்டும் இல்ல, கும்பகோணத்திலும் ஒரு கிளை இருக்கு" எனதெரிவித்துள்ளார்.

Advertisment

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தாமஸைகும்பகோணம் அழைத்துச் சென்று அங்குள்ள மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது அங்கிருந்த மற்றொரு தரகரான மணிகண்டன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த போலீசார் மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 தரகர்களையும் மற்றும் 2 பெண்களையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர்.

Kumbakonam police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe