ADVERTISEMENT

மீண்டும் கதிராமங்கலம் போராட்டம்; பேரா.ஜெயராமன் கைது 

09:57 PM Feb 01, 2019 | selvakumar

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் மீண்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், பொதுமக்களுக்கும் பிரச்சனை துவங்கியிருக்கிறது.

ADVERTISEMENT

ஓ,என்,ஜி,சி எனும் பொதுத்துறை நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஆண்டு துவக்கத்தில் தொடங்க முடிவு செய்து, அதற்கான இயந்திரங்களை கொண்டுவந்து இறக்கியது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆயில் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் மக்கள் ஐயனார் கோயிலில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை 200 நாட்களுக்கு மேல்நடத்தினர். கிராம மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுக ஆர்வளர்களும், கல்லூரி,பள்ளி மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தை வலுவடைய செய்தனர். " ஏற்கனவே எரிவாயு திட்டத்தால் பசுமையான விவசாய நிலங்கள் பாழாகிவிட்டது, நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இன்னும் புதிது, புதிதாக வந்தால் பாலைவனமாக மாறிவிடும் ." என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தீவிர போராட்டத்தால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்களின் பராமரிப்பு பணிகளை நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் கதிராமங்கலத்தில் பெட்ரோல் கிணற்றை பராமரிப்பு பணிகளை தொடங்க வந்தனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர், அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களிடம் விவரம் கேட்டு உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள், கதிராமங்கலத்தில் பணியை தொடங்கியிருக்கும் செய்தியை மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு கூறினர்.

இந்தநிலமையில் கதிராமங்கலம் கிராமத்துக்கு வந்த ஜெயராமன் ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களிடம், எதற்கு வந்திருக்கீீங்க, உடனே பணிகளை நிறுத்தி விட்டு செல்லுமாறு கூறினார். மேலும் கிராம மக்களும் அங்கு திரண்டுவந்ததால் மேலும் பரபரப்பு கூடியது.

இந்த சம்பவத்தயறிந்த பந்தநல்லூர் காவல்துறையினர் விரைந்து வந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சித்ரா செயராமன், ராஜு பெண்கள் கலையரசி , ஜெயந்தி ஆகியோர் மீது 143,147,447, 506(2) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். பேராசிரியர் ஜெயராமன் ராஜீவ் உள்ளிட்டவர்களை கும்பகோணம் சிறையில் அடைத்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT