/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_174.jpg)
கும்பகோணம் தாராசுரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பக்கத்தில் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்தது ஶ்ரீதர் என்பவர் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் கம்மாலத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர். தொழிலாளியான அவருக்கு அதிக குடிபழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி நரசிங்கன்பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் ஈ.பி. காலணி பகுதியில் ஸ்ரீதர் எரிந்த நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடந்துள்ளார். அதைக் கண்ட பொதுமக்கள் கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஶ்ரீதர் குடிபோதையில் இறந்தாரா? அல்லது முன்விரோத காரணமாக யாரேனும் இதனை செய்தனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)