Skip to main content

ரம்ஜான் பண்டிகை... குடந்தை பகுதி இஸ்லாமியர்கள் எடுத்த முடிவு

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
kumbakonam textiles shops



ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் உலகையே உலுக்கி எடுத்துள்ள கரோனா எனும் கொடிய வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் களையிழந்து காணப்படுகிறது.
 

இந்தநிலையில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், இவ்வருட ரம்ஜானை புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
 

இது குறித்து இஸ்லாமிய முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், "கரோனாவால் பொருளாதரத்தை, முழுமையாக வாழ்வை இழந்துள்ள இந்த சூழலில் ரம்ஜான் பண்டிகையை பெரிதாக கொண்டாட வேண்டாம் என நினைத்தாளும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்காக புது துணிகளை எடுக்கலாம் என நினைத்தாலும் அது முடியவில்லை. ரம்ஜானை முன்னிட்டு முக்கிய கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும் வரும் மே 31 ம் தேதி வரை பிரதான ஜவுளி கடைகளை திறப்பதில்லை என  வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தீபாவளியை போல ரம்ஜான் காலத்திலும் பரபரப்பாக காணப்படும் கும்பகோணம் நகரப்பகுதியில் பெரிய  ஜவுளிக் கடைகள் திறக்கப்படாமல் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
 

மேலும்  ஒரு சில சிறிய ஜவுளி கடைகள் திறந்தாலும் புதிய துணிகளை எடுக்க செல்லும் போது கரோனா தொற்று ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அதனால் இஸ்லாமிய ஜமாத்தார்கள் நாமாகவே தவிர்த்துவிடலாம் என தவிர்த்து வருகின்றனர். அதனை சக முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டு இவ்வருடம் ரம்ஜான் பண்டிகையை புது ஆடைகள் அணியாத பண்டிகையாகவே எங்கள் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்" என்கிறார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.