Advertisment

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்..! பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்..

Kumbakonam school fire accident memorial day ..! Villagers pay tribute in Perambalur district ..

2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக் குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த துயர நிகழ்வின் 17ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (16.7.2021) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்துர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு ‘நம்மால் முடியும் நண்பர்கள் குழு’ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தீ விபத்தால் உயிரிழந்த குழந்தைகளின் உருவப் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும்அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் அக்குழுவினர், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

Perambalur school Kumbakonam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe