சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக மனமுடைந்த கல்லூரி மாணவி ஆய்வகத்தில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். அவரது மகள் கவுசல்யா 23 வயதேயான இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் எம்பில் படித்து வந்தார். நேற்று மாணவி கவுசல்யா தனது ஆய்வுக்கட்டுரையை பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு பேராசிரியர் தாமதமாகவும், தான்கூறியது போல ஆய்வுகட்டுரை இருக்கவில்லை என கூறி ஆய்வுக்கட்டுரையை பேராசிரியர் ஏற்றுக்கொள்ளாமல் மாணவியை அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

kumbakonam incident govt college student gowsalya professor

இதற்கிடையில் பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் மாணவி ஏன் என்னோட ரிசர்ச் கட்டுரையை மட்டும் வாங்க தாமதிக்கிறிங்க, மற்றவர்கள் தாமதமாக கொடுத்ததை வாங்கினீங்க என்னை மட்டும் ஏன் அவமானப்படுத்துறீங்க என்று விளக்கம் கேட்டு பேசியிருக்கிறார். இதனை கேட்டு திடீரென ஆத்திரமடைந்த பேராசிரியர், மாணவியை சாதிய ரீதியாக அவமானப்படுத்தியதாகவும், சக மாணவிகளுக்கு முன்னாள் அவமானப்பட்ட கௌசல்யா மனமுடைந்து ஆய்வுக்கூடத்திலிருந்த உயிருக்கு ஆபத்தான ரசாயன கலவையை எடுத்துக்குடித்து மயக்கமடைந்திருக்கிறார். ஆபத்தான நிலையில் கிடந்த கவுசல்யாவை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து மயங்கி கிடந்த கௌசல்யாவை அவசர அவசரமாக தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.