Skip to main content

காப்பீட்டு தொகை கொடுக்க மறுத்ததால் விவசாயி சங்க அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
ந்ந்ந்

 

கும்பகோணம் அருகே கூட்டுறவு சங்கத்தில் காப்பீட்டுத் தொகை வழங்காததால் மனமுடைந்த விவசாயி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் புகுந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

கும்பகோணம் அருகே திருமேற்றிழிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க.சின்னப்பா அவரது மகன் கீர்த்திபாலன் (27). விவசாயி. இவர் 2016 ஆம் ஆண்டு பட்டீசுவரத்தில் உள்ள. தனது 6 ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்திருந்தார். அப்போதுகாவேரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவிய வறட்சி காரணமாகப் பயிர்கள் முழுவது பாதிக்கப்பட்டன. 

இதுதொடர்பாக பட்டீசுவரம், சோழநாடு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன் சங்கத்தில் காப்பீடு செய்தார்.  இந்தநிலையில் கீர்த்திபாலனுக்கு ரூ. 1.02 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது, ஆனால் சங்கத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்க அலுவலகத்துக்கு  வந்த கீர்த்திபாலனிடம் மீண்டும் பின்னொரு நாளில் வருமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர். மனமுடைந்த இவர்மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து தன்உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டார். அப்போது,அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்