
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் உலக அளவில் பிரசித்தி வாய்ந்தது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதாகக் கோவில் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக்கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)