ADVERTISEMENT

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கும்பாபிஷேகம்

03:24 PM Jan 27, 2019 | manikandan

ADVERTISEMENT

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

கன்னியாகுமாியில் ராமகிருஷ்ணா மடத்துக்கு சொந்தமான விவேகானந்தா கேந்திராவில் கடற்கரையையொட்டி ஐந்தரை ஏக்கா் நிலத்தில் 22 கோடி ருபாய் மதிப்பில் திருப்பதி வெங்கடாசலபதி கிளை கோவில் கட்டப்பட்டது.

அந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்று நடந்தது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 5 நாட்களாக திருப்பதி கோவில் தலைமை அா்ச்சகா் சேஷாத்திாி தலைமை நடந்து வந்தது. நேற்று முன் தினம் மாலை மூலஸ்தான கருவறையில் 7 1/2 அடி வெங்கடாசலபதி சிலையும், கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயாா் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருட பகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையொட்டி ஏராளமான போலிசாா் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டியிருந்தனா்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT