தமிழகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளால் தாக்கப்படுவதும், படகுகளை உடைப்பதோடு, மீனவர்களை சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் கனரக கப்பல்களால் மீனவர்களின் படகுகள் மீது மோதி அவர்களின் படகை சேதப்படுத்துகின்றனர். இதேபோல் பல்வேறு இன்னல்களுக்கு மீனவர்கள் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

 Kumari, Kerala fishermen caught captive in Lakshadweep

Advertisment

இந்த நிலையில் குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறையில் இருந்து ஆன்றோ என்பவர் கடந்த 10-ம் தேதி தனது விசைப்படகில் லட்சத்தீவில் மீன் பிடிக்க குமரி மீனவர்கள் கில்பின் (23), சுஜி (29), ராஜீ (59), ஜான் (57) மற்றும் கேரளா மீனவர்கள் மூன்கு பேர் என 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

இவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்த போது அவர்களின் படகு திடீரென்று பழுதாகியுள்ளது. பின்னர் அங்கு வந்த மற்றொரு விசைப்படகு மூலம் 8 மீனவர்களும் அகத்தி என்ற பகுதியில் கரை சேர்ந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மீன் வளத்துறை அதிகாரிகள் அந்த மீனவர்களின் படகை சோதனை செய்த போது அவர்கள் லட்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கான எந்த வித அனுமதியையும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து அதிகாரிகள் அந்த 8 மீனவர்களையும் கடந்த 2 வாரமாக சிறைபிடித்து வைத்துள்ளனர். மேலும் அவர்களை கடுமையான முறையில் விசாரித்தும் வருகின்றனர். அவர்களுடைய உறவினர்கள் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இந்த மீனவர்களை சிறையில் அடைப்பதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பாதிரியர் சர்ச்சில் கேட்டுக்கொண்டுள்ளார்.