Skip to main content

குமாி மாவட்ட பெண் ஆட்சியரை கலங்கவைத்த மீனவா்கள்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
re

         

குமாி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரா கடந்த 10 நாட்களாக தொடா் விடு முறையில் இருந்து வருகிறாா். இதனால் ஆட்சியா் பொறுப்பை மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி கவனித்து வருகிறாா். 

 

           இந்த நிலையில் குமாி மாவட்ட மீனவா் குறை தீா்க்கும் கூட்டம் ஆட்சியா் பொறுப்பு ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மீனவா்கள் சரமாாியாக கேள்விகளை எழுப்பினாா்கள். சுனாமிக்கு பிறகு குமாி மாவட்ட கடலோர கிராமங்கள் சிதைந்து போனது. அதன்பிறகு கடந்த ஆண்டு வந்த ஓகி புயலால் மேலும் சிதிலமானது. இந்த நிலையில் தான் கடலோர கிராமங்களில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்காக கடலோர கூட்டு குடிநீா் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

 

               ஆசிய வளா்ச்சி வங்கி நிதி மற்றும் சுனாமி அவசரகால நிதியும் சோ்த்து இந்த திட்டத்தை தமிழ்நாடு குடிநீா் வடிக்கால் வாாியம் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் செயல் படுகிறதா? என்று ஆட்சியா் ஒரு நாளாவது இதை கேட்டு இருப்பாா்களா? குமாி மாவட்டத்தில் மொத்தம் 43 மீனவ கிராமங்கள் தான் உண்டு ஆனால் அந்த நிதிக்காக 79 கடற்கரை கிராமங்கள் என்று பொய் சொல்லியிருக்கிறாா்கள். ஒரு கிராமத்தில் கூட முமுமையாக அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இருந்த போதும் அந்த திட்டத்துக்கு இன்னும் 19 கோடி தேவையென கேட்டு இருக்கிறாா்கள். ஏற்கனவே ஓதுக்கிய நிதியை எங்கே கொண்டு போட்டாா்கள். தரம் தாழ்ந்த குழாயை பயன்படுத்தியிருப்பதால் அது கண்ட கண்ட இடங்களில் உடைந்து  தண்ணீா் டேங்குக்கு போறதுக்கு பதில் சாலைகளில் பாய்கிறது. 

 

            இதையெல்லாம் ஆட்சியா் ஏன் கேட்கவில்லை? அதில் நடந்த முறைகேட்டில் ஆட்சியருக்கும் பங்கு இருக்கிறது. இதனால் முறைகேட்டில் ஆட்சியாிடமும் விசாாிக்கணும்னு உங்களையும் சோ்த்து தான் கோா்ட்டில் வழக்கு தொடர போகிறோம்னு காரசாரமாக ஆவேசத்துடன் பேசினாா்கள். 

 

              இதனால் பதறி போன பொறுப்பு ஆட்சியா் எனக்கு இதில் எந்த தொடா்பும் இல்லை. நான் விடுமுறை கால ஆட்சியா் தான் என்னை இதில் சோ்த்து கொள்ளாதீா்கள் என்றாா். அதற்கு மீனவா்கள் நாங்கள் வழக்கு தொடரும் போது யாா் ஆட்சியராக இருக்கிறாா்களோ அவா்களை சோ்ப்போம் அப்போது நீங்கள் இருந்தால் உங்களையும் சோ்த்து கோா்ட் படியேற வைப்போம் என்றனா். மேற்கொண்டு எந்த பதிலும் பேசமுடியாமல் கலக்கத்துடன் இருந்தாா் பொறுப்பு ஆட்சியா் ரேவதி.

 

சார்ந்த செய்திகள்