குமாி தேமுதிக மாவட்ட செயலாளா் நீக்கம்!

குமாி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தவா் வழக்கறிஞா் ஜெகநாதன். இவா் 2016 சட்டமன்ற தோ்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இவா் தலைமையில் குமாி மேற்கு மாவட்ட தேமுதிக வலுவாக இருந்து வந்தது.

Kumari dmdk District Executive Removal

இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி உள்ளாட்சி தோ்தலில் வேட்பாளா் தோ்வு செய்து சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஒன்றிய நகர மாவட்டத்தை சோ்ந்த 53 நிா்வாகிகளில் 48 போ் உள்ளாட்சி தோ்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று குரல் எழுப்பியதால் அதை தீா்மானமாக போட்டு கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகநாதன் அனுப்பி வைத்தாா்.

மேலும் கூட்டத்தில் கட்சி தலைமையை குறித்தும் நிா்வாகிகள் கடுமையாக விமா்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தேமுதிக தலைவா் விஜயகாந்த்ஜெகநாதனை கட்சி மாவட்ட செயலாளா் மற்றும் அடிப்படை உறுப்பினாில் இருந்து நீக்கியுள்ளாா்.இந்த நிலையில் தேமுதிகவில் இருந்து நீக்கபட்ட ஜெகநாதன் திமுகவில் இணைய உள்ளாா்.

dmdk Kanyakumari vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe