
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டிற்குதலா 5,000ரூபாயும், அதேபோல் பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 4,100 ரூபாயும்நிவாரணமாக வழங்கப்படும் எனதமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேபோல் குமரி மாவட்டத்தில் பாதிப்படைந்த மானாவாரி, நீர் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஒரு ஹெக்டருக்கு 10,000 நிவாரணம் வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Follow Us