Skip to main content

பூரண மது விலக்கு கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
Kumari Ananthan


    
மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தி தினத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பூரண மது விலக்கை வலியுறுத்தி ஆண்டு தோறும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

அதன்படி 02.10.2018 செவ்வாய்க்கிழமையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

"மோடி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்" - கே.எஸ்.அழகிரி

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

ks azhagiri talks about rahul gandhi speech and indian democracy 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் 91வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜனநாயகம் பற்றி பேசுகையில் இந்திய நாடாளுமன்றத்தைப் பற்றி பேசினாரே தவிர, ஜனநாயகம் தவறு என்று பேசவில்லை. மோடிக்கு எதிராக ஒருவர் கருத்து கூறினால் அது இந்தியாவிற்கு எதிராகச் சொல்லப்பட்ட கருத்து என்று பாஜகவினர் சொல்கின்றனர். ஆனால், மோடி ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார். ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது. நாடாளுமன்றத்தை முடக்குவதே பாஜக தான். நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பினரைப் பேசவே விட மாட்டோம் என்பது நியாயமா. எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஜனநாயகத்தைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே.

 

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவூட்டும் வகையில் ஈரோட்டிலிருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணத்தை வரும் 28 ஆம் தேதி மேற்கொள்ள உள்ளோம். இந்த நடைப்பயணமானது தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ளது" என்றார். 

 

 

Next Story

சகோதரர் இறந்த அதிர்ச்சி... குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

Kumari Ananthan admitted to hospital!

 

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், மறைந்த வசந்த குமாரின் அண்ணனுமான குமரி அனந்தன் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 9 -ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு கரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் காலமானார்.

 

Kumari Ananthan admitted to hospital!


கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தம்பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ற குமரி அனந்தன் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரி அனந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.