Kumari Ananthan admitted to hospital!

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், மறைந்த வசந்த குமாரின்அண்ணனுமான குமரி அனந்தன்ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின்மக்களவை உறுப்பினருமானவசந்தகுமார் இன்றுமாலை காலமானார்.அவருக்கு வயது 70.கடந்த 9 -ஆம் தேதி கரோனாஉறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்குகரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் காலமானார்.

Advertisment

Kumari Ananthan admitted to hospital!

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தனது தம்பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ற குமரி அனந்தன் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரி அனந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.