Skip to main content

பிரசவத்தில் தாயும் குழந்தையும் மரணம்: நாடகமாடிய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஊழியர் விஜினுக்கும் குழித்துறையை சேர்ந்த மெர்லின்திவ்யா (27) இருவருக்கும் கடந்த 11 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மெர்லின்திவ்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனையில் பிரவசத்துக்காக நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.

 

k

   

மெர்லின்திவ்யாவை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சுகமான பிரவசம் நடக்கும் என்று கூறினார். இதை கேட்டு கணவர் விஜின் மற்றும் உறிவனர்கள் சந்தோஷப்பட்டனர். இந்தநிலையில் பிரசவ வலி ஏற்பட்ட மெர்லின்திவ்யாவை சாதாரண அறையில் இருந்து பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். கொஞ்ச நேரத்தில் பெண் குழந்தை சுகமாக பிறந்தது என்றும் தாயும் நலமாக இருக்கிறார் என மருத்துவமனை ஊழியர்கள் உறவினர்களிடம் வந்து கூறினார்கள். இதை கேட்டு உறவினர்கள் எல்லையில்லா சந்தோஷம் அடைந்தனர். ஆனால் குழந்தையை யாரிடமும் காட்டவில்லை.

 

    இந்த நிலையில் திடீரென்று மெர்லின் திவ்யாவையும் குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆம்புலன்ஸ் பறந்தது. இதை பார்த்த உறவினர்கள் டாக்டரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் பதட்டத்துடன் உறவினர்கள் அந்த ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தனர். அந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்குள் சென்றது. 


    அங்கு அவசர, அவசரமாக தாயையும் குழந்தையையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு உயிர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர் விட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் கேட்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லி கொண்டிருந்தனர். 

 

     இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் போலிசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி இறந்து போன தாயும் சேயும் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் குழு பரிசோதனை செய்த பிறகு இறந்து போனதற்கான காரணங்கள் தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்குப்படும் என கூறியதால் உடல்களை ஆசாரிப்பள்ளம் கொண்டு சென்றனர்.
                        

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதபூஜை எதிரொலி; பூக்கள் விலை கடும் உயர்வு

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ayudapuja Echo; The price of flowers has skyrocketed

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.

 

ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

 

 

Next Story

குமரியில் தொடங்கிய சிவாலய ஓட்டம்; ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

 Shivalaya run started in Kumari; devotees gathered in thousands

 

நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவது மிகவும் பிரசித்தமானதாகும். 18-ம் நூற்றாண்டிலிருந்தே சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவது முக்கியத்துவமானதாகும். சிவாலயம் ஓடும் பக்தர்கள் விரதம் இருந்து இன்று (18-ம்தேதி) ஓட்டத்தை துவங்கினார்கள். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து தொடங்கிய சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திகரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிக்கோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவிலில் முடிவடையும்.

 

சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் 108 கி.மீ தூரம் கொண்டது. கேரளா மற்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கால்நடையாக நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களிலும் சென்று 12 கோவில்களையும் தரிசிக்கின்றனர். காவி வேட்டி, காவித் துண்டு அணிந்து கொண்டு கையில் விசிறி, திருநீருடன் கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். சிவாலய பக்தா்களுக்கு வழி எங்கிலும் தாகம் தீர்ப்பதற்காக மோர், பானகம், எலுமிச்சை சாறு அது போல் கஞ்சியும் பூசணிக்காயை கொண்டு எாிசோி குழம்பும் மேலும், கூட்டு பொரியல்களுடன் சாப்பாடு வழங்குகின்றனர்.

 

சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மேற்கு மாவட்டத்தில் சாலைகள் எங்கும் அந்த பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. மேலும், பக்தர்களுக்கு வசதியாக 12 சிவாலயங்களுக்கும் செல்லும் விதமாக போக்குவரத்துத் துறை சாா்பில் மார்த்தாண்டத்திலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.