Advertisment

ஓரின சேர்க்கை நண்பருக்கு திருமண ஏற்பாடு; விரக்தியில் இன்ஜினியர் தற்கொலை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டனும் ஈத்தன்காட்டை சேர்ந்த மகேசும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிக்கும் போது நண்பர்களானார்கள். பின்னர் படிப்பு முடிந்து ஓசூரில் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் சொந்த ஊருக்கு வந்து மணிகண்டன் கொத்தனார் கையாள் வேலையும், மகேஷ் எலக்டரீஷியன் வேலையும் செய்து வந்தனர். இருந்தாலும் இருவரும் தினமும் சந்தித்து பேசுவார்கள். வாட்ச் அப்பிலும் மணிக் கணக்கில் இருவரும் சாட் செய்வார்கள்.

Advertisment

மணிகண்டன்

m

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மணிகண்டன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்று தெரியாமல் கதறினார்கள். இந்தநிலையில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை பெற்றோர்கள் சோதனை செய்த போது அதில் மணிகண்டன் எழுதிய கடிதமும் செல்போன் மெமரி கார்டும் கிடைத்தது.

Advertisment

மகேஷ்

ம்

கடிதத்தை படித்த போது அதில் மணிகண்டனும் மகேசும் அடிக்கடி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும் தற்போது மகேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் இதற்கு மணிகண்டன் மகேஷிடம் எதிர்ப்பு காட்டிய பிறகும் மகேஷ் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டதோடு மணிகண்டனுடன் மகேஷ் பேசுவதையும் குறைத்து கொண்டதால் அந்த ஆத்திரத்தில் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் எழுதியிருந்தது.

இதே போல் அந்த மெமரி கார்டில் மணிகண்டனும் மகேஷ் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் வீடியோ இருந்தது. இதனை தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe