Advertisment

கார் பயணத்தில் கிள்ளியூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குமாரதாஸ் மரணம்

கிள்ளியூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குமாரதாஸ் காரில் சென்றுகொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார்.

Advertisment

குமாி மாவட்டம் கிள்ளியூா் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ ஆக இருந்தவா் டாக்டா் குமாரதாஸ். இவா் தற்போது தமிழ் மாநில காங்கிரசில் மாநில துணை தலைவராக உள்ளாா். ஆரம்பத்தில் ஜனதா கட்சியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குமாரதாஸ் 1984-ல் ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஆனாா். அதன் பிறகு 1991-ல் ஜனதா தளம் கட்சியில் நின்று எம்.எல்.ஏ ஆனாா்.

Advertisment

k

பின்னா் மூப்பனாா் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த குமாரதாஸ் மூப்பனாா் த.மா.க தொடங்கியதும் அதில் இணைந்த குமாரதாஸ் 1996 மற்றும் 2001-ல் த.மா.க எம்.எல்.ஏ ஆக இருந்தாா். கிள்ளியூா் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ ஆக இருந்த குமாரதாஸ் ஜனதா, ஜனதா தளம், காங்கிரஸ், அதிமுக, தமாக என பல்வேறு கட்சியில் பயணித்து இருக்கிறாா்.

இந்த நிலையில் கண் பாா்வை சிறிதளவு மங்கிய நிலையில் ஆப்ரேசன் செய்து கொண்டும் மேலும் உடல் நிலையும் சாியில்லாத நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தாா்.

நேற்றுஉடல் பாிசோதனைக்காக காாில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது திண்டிவனத்தில் திடீரென்று நெஞ்சு வலி வந்ததையடுத்து பயணத்திலேயே உயிா் பிாிந்தது.

குமாரதாஸ் அரசியலில் கோலோச்சி கொண்டியிருந்த காலத்தில் குமாி மாவட்டத்தில் தனக்கென்று ஓரு இளைஞா் பட்டாளத்தை வைத்திிருந்தாா். கல்லூாிகளில் மாணவா் பேரவை தோ்தல்களில் குமாரதாஸின் ஆதரவு உள்ளவரே வெற்றி பெறுவது வழக்கமாக இருந்தது. குமாரதாஸின் அரசியல் சிஷ்யன்களான ஜாண்ஜேக்கப்(தமாக) 2 முறை எம்.எல்.ஏ ஆக இருந்தாா். அதே போல் மனோ தங்கராஜ் தற்போது பத்மனாபபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆக உள்ளாா்.

MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe