Advertisment

அதிமுகவில் விருப்ப மனு தேதி நீடிக்க காரணம் தெரியுமா? கேட்டா ஷாக்காயிடுவீங்க!

a

மக்களவை தோ்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 14ம் தேதி வரை நீட்டிப்பு செய்து அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்புக்கு காரணம் என்னவென்று விசாரித்த போது சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதை அப்படியே தருகிறோம்.

Advertisment

தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கு யார் யாரோடு கூட்டணி என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அ.தி.மு.க. தடாலடியாக விருப்ப மனு வாங்குவதற்கு முதன் முதலில் அறிவித்தது தேர்தல் சூட்டை கிளப்பியது. பி.ஜே.பி.யுடன் தான் கட்டாயம் கூட்டணி என்கிற நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக தொகுதி முழுவதும் சேர்ந்து கடைசி நாள் அன்று 1500 எண்ணிக்கையை கூட தாண்டவில்லை. விருப்ப மனுவுக்கு 25,000 ரூபாய் என்று தொகை நிர்ணயம் செய்து இருந்தாலும் யாரும் ஆர்வமாக முன் வந்து மனு கொடுக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள். ஜெ.உயிருடன் இருக்கும் போது தொகுதிக்கு குறைந்தது 100 பேராவது விருப்பமனுவை கட்டுவார்கள். மொத்தத்தில் 10,000 பேர் விருப்ப மனு கொடுத்திருப்பார்கள். தற்போது 1,500 பேர் கூட தாண்ட முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. தலைமை ஒவ்வொரு மந்திரியிடமும் குறைந்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு 20 பேராவது பணம் கட்ட வேண்டும். அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 120 பேர் விருப்ப மனு கொடுக்க வேண்டும் என்று சொல்லி கடைசி நாளை நீட்டிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

Advertisment

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை இன்று வரை 10 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். சிட்டிங் எம்.பி. பா.குமார், ஆவின் பால் சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை கார்த்திக்தொண்டைமான், அருண் செந்தில்ராம், ராமலிங்கம், உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கட்டியிருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள், 5 முன்னாள் அமைச்சர்கள் இருந்தும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, கு.பா. கிருஷஷ்ண்ணன், பூனாட்சி, என பெரிய பட்டியலே இருந்தும் இவர்கள் யாரும் கட்ட ஆர்வம் வில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தலைமை இவர்கள் எல்லோரும் போனில் பிடித்து நீங்கள் உட்பட எல்லோரும் விருப்ப மனு கட்டம் வேண்டும் என்று காட்டாய உத்தரவு போட்டியிருக்கிறார்கள். உங்கள் தொகுதியில் உங்கள் தலைமையில் குறைந்தது 20 பேராவது பணம் கட்ட சொல்ல வேண்டும். அப்போது தான் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று மிரட்டி பணிய வைத்திருக்கிறார்கள்.

karthikeyan kumar Ramalingam senthilram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe