சிறப்பாக செயல்பட்ட திருச்சி போலீசாருக்கு பாராட்டு

Kudos to Trichy Police for a job well done

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்குகூடுதல் இயக்குநர் சங்கர் நேற்றுதிருச்சி மாநகரத்தில் உள்ளகண்டோன்மென்ட் மற்றும்தில்லை நகர் ஆகிய காவல் நிலையங்களைப் பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின்செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார். பின்னர் மாநகர காவல் ஆணையரக கூட்ட அரங்கில் நடந்தபாரி குற்ற வழக்குகளான ஆதாயக் கொலை, கொலை, வழிப்பறி, கொள்ளை,பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதற்குப் பின் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியதோடு திருச்சி மாநகரில் ஜனவரி மாதத்தில்பதிவான திருட்டு மற்றும் வழிப்பறிசம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத்துரிதமாகச் செயல்பட்டு கைது செய்து, வழக்கின் சொத்துக்களை மீட்டுத்தந்த 3 ஆய்வாளர்கள் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 18காவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளைத்தெரிவித்தார்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe