Skip to main content

சொத்து தராததால் தந்தையின் தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய்த மகன்; அதிர்ந்த கதிர்குளம் மக்கள்

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
kudi

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா பரதராமி அடுத்த கதிர்குளம் கிராமத்தில் வசிப்பவர் கோபால். அவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருந்துவருகிறது. இதில் அவர் விவசாயம் செய்து வருகிறார். பரம்பரை சொத்தான அதிலிருந்து தனக்கு பங்கு வேண்டுமென கோபால் மகள் பாலு தனது தந்தையிடம் பங்கு கேட்டு வந்துள்ளார். நீ ஊதாரி உனக்கு பங்கு தரமாட்டேன் போடா என விரட்டி வந்துள்ளார்.

 

இது தொடர்பாக தந்தை - மகன் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஊரார் பல பஞ்சாயத்து செய்தும் இந்த பிரச்சனை தீராமல் இருந்து வந்துள்ளது. கடந்த வாரத்தில் மீண்டும் அப்பா - மகன் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. போதையில் அப்பாவை எச்சரித்துள்ளான் மகன். இதனை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். 

 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 19ந்தேதி காலை கதிர்குளம் விவசாய மக்கள் தங்கள் நிலத்துக்கு சென்றபோது, ஒரு இடத்தில் கோபால் தலை மேல் கருங்கல் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். இதுப்பற்றி உடனடியாக பரதராமி போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தினர்.

 

அதில் அப்பா - மகன் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது என்றும், சமீபத்தில் நடந்த ஒரு சண்டையில் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என தன் தந்தையை பார்த்து மகன் கோபத்தில் சொன்னதையும் பலர் தகவல் கூறினர். இதனை தொடர்ந்து கோபால் மகன் பாலுவை போலிஸார் தேடத்துவங்கினார். அவன் தலைமறைவாக இருந்துவந்தான்.

 

இந்நிலையில் இரவு பாலுவை கைது செய்த போலிஸார் அவனிடம் நடத்தி விசாரணையில் சொத்துக்காக தான் தான் தன் தந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் எப்படி கொலை செய்தாய் என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

சொத்துக்காக அப்பனை கொலை செய்த மகனை நினைத்து அதிர்ச்சியில் உள்ளனர் அப்பகுதி மக்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி விபத்து-இருவர் உயிரிழப்பு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Two people were Lose their live in an electric shock while setting up a pandal at home

 

வேலூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் மொகிலி (39) என்பவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது வீட்டில் நாளை நடக்கும் நிகழ்ச்சிக்காக வீட்டின் மாடியில் பந்தல் அமைக்க மொகிலி முன்றுள்ளார். அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர் (22) என்பவரும் மோகிலியும் இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்றனர். அப்போது உயரழுத்த மின் கம்பி இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

 

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Next Story

சாம்பிராணி புகை போட வந்த இடத்தில் பாலியல் சீண்டல்; போக்சோவில் போலீசார் நடவடிக்கை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

 Sambrani came to smoke; Police in action at POCSO

 

வேலூரில் சாம்பிராணி புகை போட வந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆக்ராவை சேர்ந்த காலீஸ் பாஷா என்ற நபர் அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் சாம்பிராணி புகை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காட்பாடி பகுதியில் சாலையோரம் இருந்த கடை ஒன்றுக்கு சாம்பிராணி புகை போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அச்சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆத்திரத்தில் காலீஸ் பாஷாவை அந்தப் பெண் தாக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.