Advertisment

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ரெட் அலார்ட் பாதுகாப்பில் கொண்டு வர மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

kudankulam

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருப்பதையொட்டி நாடு முமுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் ஏற்கனவே மத்திய கம்பெனி பாதுகாப்பு படையில் கீழ் உள்ளது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் காவல்கிணறில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தையும் பாதுகாப்பு பலப்படுத்தும் விதமாக "ரெட் அலார்ட்" பாதுகாப்பில் பலப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது. இதையொட்டி உடனடியாக அணு மின் நிலையத்துக்கும் இஸ்ரோ ஆய்வு மையத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

kudankulam
இதையும் படியுங்கள்
Subscribe