Skip to main content

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பு

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ரெட் அலார்ட் பாதுகாப்பில் கொண்டு வர மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

kudankulam


இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருப்பதையொட்டி நாடு முமுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.           இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் ஏற்கனவே மத்திய கம்பெனி பாதுகாப்பு படையில் கீழ் உள்ளது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் காவல்கிணறில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தையும் பாதுகாப்பு பலப்படுத்தும் விதமாக "ரெட் அலார்ட்"  பாதுகாப்பில் பலப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது.  இதையொட்டி உடனடியாக அணு மின் நிலையத்துக்கும் இஸ்ரோ ஆய்வு மையத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தரைதட்டிய இழுவைக் கப்பல்; கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Ground Tug Kudankulam Nuclear Power Station Description

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக்கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவை கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி கடந்த 9 ஆம் தேதி காலையிலிருந்து நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே அப்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.  இதனைத் தொடந்து சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு கடந்த 10 ஆம் தேதி காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மிதவை படகு மூன்று இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவை படகின் மூலம் மிதவை கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கயிறு அறுந்து விட்டது. அடுத்த முயற்சியாக அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்து தான் மிதவை கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்திருந்தனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

 

கூடங்குளம் அணுமின் நிலையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடலில் தரை தட்டிய கப்பலில் இருக்கும் நீராவி ஜெனரேட்டர்கள் பாதுகாப்பாக உள்ளன. நீராவி ஜெனரேட்டர்கள் படகு தளத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளதால் இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. அதே சமயம் இந்திய அணுமின் உற்பத்திக் கழக விஞ்ஞானிகளும், ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். பாறை இடுக்குகளில் சிக்கி உள்ள இழுவைக் கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும். கடந்த 2 நாட்களாக கப்பலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கப்பலை மீட்க மேலும் 3 நாட்கள் ஆகும். தரைதட்டி கடலில் நிற்கும் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மிதவை கப்பல் தற்பொழுது வரை அகற்றப்படாதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

“அணு உலைகளை மூடி தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும்” - வைகோ

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Shut down nuclear reactors and save Tamil Nadu from destruction Vaiko

 

கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணு உலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாரணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணு உலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணு உலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் அமைக்கப்பட்ட செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள். எண்ணற்றவர்கள் இறந்தார்கள். ஜப்பானில் அணு உலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளார்கள். ஜப்பானியர்கள் அணு உலையை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

 

இதே போன்று கூடங்குளம் அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற அணுஉலைக் கழிவு நீரை வங்காள விரிகுடாவில் தான் திறந்துவிடுவார்கள். இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலை மீது பேராபத்து கத்திபோல் தொங்குகிறது. கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவது ஒன்றுதான் எதிர்காலத்தில் தென்தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அரசுக்குச் சொல்வதோடு, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நிலவில் கால் வைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பூமியே அழிந்துபோகும் என்பதை கவனப்படுத்துகிறேன்.

 

ஒன்றரை ஆண்டு காலம் இடிந்தகரை மக்கள் போராடினார்கள். அரசுகள் கண்டுகொள்ளவில்லை. போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் கூட ஒரு வழக்கு இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. கூடங்குளம் அணு உலைகளால் செந்தமிழ்நாட்டின் தென்பகுதி அழிவுக்கு ஆளாகும் என மீண்டும் எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.