A KTM bike caught fire in the middle of the road

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வன்னியபிள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் இவர் நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கியில் தீபாவளிக்கு ஜவுளிகள் வாங்கிக் கொண்டு தனது கேடிஎம் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி சாலையில் சென்ற போது சதீஷ் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த கேடிஎம் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக பைக்கில் இருந்து கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக சதீஷ் உயிர் தப்பினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறை வீரர்கள் பைக்கின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து எலும்புக் கூடாக மாறியது.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறந்தாங்கி கட்டுமாவடிச் சாலையில் திடீரென விலை உயர்ந்த கேடிஎம் பைக் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.