KT Rajendrabalaji twit

Advertisment

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து, ‘ட்வீட்’ செய்துள்ளார். கே.டி.ராஜேந்திரபாலாஜி அதில்கூற வருவது என்னவென்றால் –

“திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி ஒன்றியம் - கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த பரமகுரு, தனது ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பேடு பகுதியில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பரமகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பரமகுரு படுகொலைக்கு தமிழக அரசின் மீது விமர்சனம் செய்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனாலேயே, எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.” என்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி...

 KT Rajendrabalaji twit

Advertisment

‘இறந்த பரமகுரு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். ஸ்டாலின் அவர்களின் வெற்றறிக்கை அரசியலையும், நாடகங்களையும் மக்கள் அறியாமல் இல்லை. ஆனால், தமது சொந்த கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்த செய்தியில் கூட அரசியல் ஆதாயம் தேடுவது, மிகவும் மலிவான அரசியல்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.