Skip to main content

பால்விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்! -கே.டி.ராஜேந்திரபாலாஜி சமாளிப்பு!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகாசியில் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில்  “கடந்த 5 ஆண்டுகள் பால் விலை உயர்வு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

ktr

 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை விலை உயர்த்தி அறிவித்திருந்தால்,  இது பெரிதாக தெரிந்திருக்காது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. பால்விலையை உயர்த்தக்கூடாது என்று தமிழக முதல்வர் முடிவு செய்திருந்தார்.

 

தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பால் விலையை உயர்த்த வேண்டியிருந்தது.  பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதால்தான் இந்தவிலை உயர்வு. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பி இந்த விலை உயர்வை அறிவிக்கவில்லை.

 

விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியபோது மிகுந்த மகிழ்ச்சியோடுதான் உயர்த்திக் கொடுத்தோம். அதே நேரத்தில் பால்விலை உயர்வை அறிவிக்கும்போது மிகுந்த சங்கடத்தில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பால் விலை குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக,  தமிழகத்தில் உள்ள தனியார் பால் விலையை விட ஆவின் விலை குறைவுதான். மற்ற மாநிலங்களில் பால் கொள்முதலில் கொடுக்கப்படும் விலையைவிட தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கூடுதலாக விலை கொடுக்கப்படுகிறது.

 

அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவுக்கு மக்கள் ஆதரவாகத்தான் இருப்பார்கள். இதை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மட்டுமே அரசியலாக்குகிறார்கள்.தமிழகத்திலுள்ள 20 மாவட்ட மக்கள் பால் உற்பத்தி பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நலன் கருதியே அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.” என்று பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்தார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

 

Next Story

கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறியது ஏன்? - 2 தொகுதிகளை விட்டுக்கொடுத்த விருதுநகர் அ.தி.மு.க.! 

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் விருதுநகர், திருச்சுழி ஆகிய இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதியுள்ள 5 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவெடுத்து, கீழ்க்கண்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  

 

1.ராஜபாளையம்          - கே.டி.ராஜேந்திரபாலாஜி
2.ஸ்ரீவில்லிபுத்தூர்      - இ.எம்.மான்ராஜ்
3.சாத்தூர்                       - ஆர்.கே.ரவிச்சந்திரன்
4.சிவகாசி                      -  லட்சுமி கணேசன்  
5.அருப்புக்கோட்டை  - வைகைச்செல்வன்

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI


விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் நேரடியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த சிட்டிங் (அ.தி.மு.க) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை.  

 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட திருச்சுழி மற்றும் விருதுநகர் தொகுதிகள், இந்தத் தடவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க.-வுக்கென்று வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளும் கணிசமாக உள்ளன. அ.தி.மு.க.வுக்கு விழவேண்டிய வாக்குகளை இவ்விரு கட்சிகளும் பிரிப்பதாலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளை, அ.தி.மு.க. தலைமை தாராளமாக விட்டுக்கொடுத்துள்ளது. 
 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

கே.டி.ராஜேந்திரபாலாஜியை, கடந்த தேர்தல் வரையிலும், அ.தி.மு.க. வேட்பாளராக மட்டுமே பார்த்து வந்தது, சிவகாசி தொகுதி. முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் பார்த்த உள்ளடி வேலைகளால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாதி அடிப்படையில் வாக்குகள் மாறி விழ, சிவகாசி யூனியன் தி.மு.க. வசமானது. சட்டமன்றத் தேர்தலிலும், இந்த உள்ளடி தொடரும் என்பதால், சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.