இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் என பலரும் நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

Advertisment

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி முண்டியடித்துக்கொண்டு நிவாரணப்பொருட்களை வாங்கி சென்றனர்.

Advertisment