கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி ரஞ்சன்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து ரஞ்சன்குமாருக்கு கே.எஸ்.அழகிரியும் சால்வை அணிவித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.
இவருடன் காங் கமிட்டியின் மாநில செயலாளர்கள் விஜயசேகர், ரஞ்சித்குமார், அயன்புரம் சரவணன், எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில துணைத் தலைவர் நிலவன், மத்திய சென்னை காங். கமிட்டியின் மாவட்ட துணைத் தலைவர் உமாபாலன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.