Advertisment

’காங்கிரஸ் கட்சியை சீரழிக்கும் நடவடிக்கையை எடுக்கிறார் மோடி’-கே.எஸ் அழகிரி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்டு பேசுகையில், ’’ராஜீவ்காந்தி அதிகாரத்தில் பிறந்து அதிகாரத்தில் தான் வளர்ந்தார். அவருக்கு 6 வயதாக இருக்கும் போது அவரது தாத்தா முதல் பிரதமராக பதவியேற்றார்.

Advertisment

r

தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்தியவர் ராஜீவ் காந்தி. நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகாரத்தை ராஜீவ்காந்தி பயன்படுத்தினார். அவரது அதிகாரம் சாதாரண மக்களையும் வாழ வைத்தது. மக்களுக்காக அதிகாரத்தை பயன்படுத்தாமல் முதலாளிகளுக்காக மோடி அதிகாரத்தை பயன்படுத்துகிறார். நாட்டு மக்களை பிளவுபடுத்தவே மோடி, அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்றார்.

Advertisment

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேசுகையில், நடந்த எம்.பி தேர்தலில் ஸ்டாலின் கைதேர்ந்த சிற்பி போல் யார் மனமும் கோணாமல் கூட்டணி அமைத்து வெற்றி பெற வைத்தார். இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் முற்றிலும் மாறி விட்டது. ஜனநாயகம் மறந்து சர்வாதிகாரமாகி விட்டது. இஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முக்கிய துறை செயலாளர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் கையெழுத்து இட்ட பின்புதான் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கையெழுத்திட்டார்.

அந்த 6 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் சிதம்பரம் மீதும், 6 செயலாளர்கள் மீதும் எவ்வித வழக்கும் பதியப்படவில்லை. ஜனநாயக நாட்டில் இதுபோல் நடந்ததுண்டா ? ப. சிதம்பரம் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் அரசியல் இருப்பதாக நான் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி ப. சிதம்பரத்தை கைவிடாது.

ஒரு புழுவை தீண்டினால் கூட அது நெளிந்து தனது எதிர்ப்பை காட்டும். ஒரு புழுவிற்கு உள்ள தைரியம் கூட தமிழக அமைச்சர்களுக்கு இல்லை. மோடி காங்கிரஸ் கட்சியை சீரழிக்கும் நடவடிக்கை எடுக்கிறார். இதற்கெல்லாம் காங்கிரஸ் படியாது. இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக பாஜ உள்ளது. 6 வயதில் ஒருவர் எப்படி 3 மொழியை கற்க முடியும். நமது நாட்டில் கல்வி ஜாதி அடிப்படையில் உள்ளது. இதுபோன்ற கொடுமை உலகத்தில் கிடையாது. இந்திய சமூகம் சமமாக இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக பிரிந்து போய் உள்ளது என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe