/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dgdgdfgfg.jpg)
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும், அரசியல் நிர்ணயசபையின் உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஓ.வி.அழகேசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறாரே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை வறுத்து தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள். தமிழக பாஜகவினரும் கே.எஸ்.அழகிரியை விட்டு வைக்கவில்லை.
ஓ.வி.அழகேசனின் நினைவு நாளை (ஜனவரி - 3 ) தமிழக காங்கிரஸ் நினைவு கூர்ந்தது. இது குறித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் விளம்பரப்படுத்திய கே.எஸ்.அழகிரி , ஓ.வி.அழகேசன் புகைப் படத்திற்கு பதிலாக மொரார்ஜி தேசாய்தின் புகைப் படத்தை பயன்படுத்தியுள்ளார். தமிழக கதர்சட்டை தலைவர்கள், நிர்வாகிகள் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், இதனை பாஜகவினர் கண்டு பிடித்து விட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tryututtru_0.jpg)
இதனையடுத்து சோசியல் மீடியாக்களில் கே.எஸ்.அழகிரியை வெளுத்து வாங்கி வருகிறார்கள். தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்த படத்தில் பிரதானமாக இருப்பவர் ஓ.வி.அழகேசன் அல்ல ; முன்னாள் பிரதமர் அமரர் மொரார்ஜி தேசாய். இதைப் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு , ஓ.வி.அழகேசன் மொரார்ஜி தேசாய் ஆகிய இருவரின் முகங்களும் நினைவுக்கு வரவில்லையா? அல்லது தெரியவில்லையா? " என்று கலாய்த்துள்ளார். இதனை வைரலாக்கி வருகின்றனர் தமிழக பாஜகவினர். இந்த விவகாரம் சமுக வலைத்தளங்களில் பரபரப்பாகியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)