சசிகலாவின் அண்ணி இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா. சசிகலா, இளவரசி போல போயஸ் தோட்டத்திலே இருந்த கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா - இளவரசி சிறைக்கு சென்றதையடுத்தும் சென்னையில் தனது பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணப்பிரியா, தினகரனுக்கு எதிரான அரசியலை செய்து வருகிறார்.

Advertisment

k

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அடிக்கடி பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவையும், இளவரசியையும் சந்தித்து விவாதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கிருஷ்ணப்பிரியா தினகரனை தீயசக்தி என விமர்சனம் செய்து வரும் கிருஷ்ணப்பிரியா, ஜெ.மறைவையடுத்து அவரைப் போலவே சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்துகொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

அவரது தோற்றம் அதிமுக அரசியலில் அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் கிருஷ்ணப்பிரியா, தற்போது மீண்டும் ஜெ.கெட் அப்பில் தோற்றமளிக்கும் புதிய படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். கிருஷ்ணப்பிரியாவின் இந்த தோற்றம் அதிமுகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.