/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34A673YZHER_0.jpg)
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒரே நாளில்கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தோர்எண்ணிக்கை 100ஐகடந்து வந்தநிலையில், தற்போது இன்று புதிய உச்சமாகஇதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203பேருக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மேலும் இன்று 176 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்கள் கரோனாபாதிப்பு இல்லாத மாவட்டங்களாக தொடர்ந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில்தொடக்கம் முதல்கிருஷ்ணகிரி மட்டுமேஒரு கரோனாபாதிப்புகூடஇல்லாத மாவட்டமாக உள்ளது. இன்றுகோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு,திருநெல்வேலி,நாமக்கல், திருச்சி, தேனி, ராணிப்பேட்டை,தென்காசி, விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை,நீலகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கரோனாயாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
அதேபோல் கரோனாதொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரைகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குகூடகரோனாஉறுதி செய்யப்படவில்லை. சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரியில்ஒருவருக்குகரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டு பின்னர் அவருடைய ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டுபரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்குகரோனா இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் தமிழகத்தில் 37 மாவட்டங்கள் கிருஷ்ணகிரியில் இதுவரை யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை, இன்றும் கரோனாஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us