Advertisment

சிவராமனின் தந்தை மரணம்; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!

Krishnagiri Sivaraman father  Ashokumar report released

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தை அசோக்குமாரும் நேற்று (22.08.2024) இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

Advertisment

இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் சிவராமனின் தந்தை அசோக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “அசோக்குமார் அதிக அளவு மது அருந்தியதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krishnagiri police report
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe