Advertisment

வீட்டு வாசலில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம்! காவல்துறை விசாரணை!!

கெலமங்கலத்தில், வீட்டு வாசலில் தீயில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் மூக்கப்பா. இவருடைய மனைவி சுசீலா (38). இவர், செப். 18ம் தேதி காலையில் வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக கதவைத் திறந்தார். அப்போது வாசலில் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

body

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி சங்கீதா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், உதவி ஆய்வாளர் செல்வராகவன் ஆகியோர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது உடனடியாக தெரியவில்லை. உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என கருதுகின்றனர். ஓசூர், கெலமங்கலம் சுற்று வட்டாரங்களில் சமீபத்தில் காணாமல் போன ஆண்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. சடலம் கிடந்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர்கள் குறித்தும், அந்தப்பகுதியில் எங்கேயாவது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால் அதில் உள்ள விவரங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Investigation police incident KELAMANGALAM Krishnagiri Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe