'தொடர்பை'க் கண்டித்த கணவன் கொலை; மனைவி, ஆண் நண்பர் கைது !

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (29).இவர் தர்மபுரியில் உள்ள இனிப்பு பலகாரம் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார்.இவருடைய மனைவி ஆஷா (24). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இரும்பு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் ஆஷாவுக்கும் கடந்த ஆறு மாதமாக முறை தவறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து அரசல்புரசலாக வடிவேலுக்குத் தெரிய வந்ததால்,மணிகண்டனுடன் பழகுவதை நிறுத்தி விடுமாறு மனைவியைக் கண்டித்தார்.கணவன் கண்டித்தது குறித்து மணிகண்டனிடம் கூறியுள்ளார் ஆஷா.

KRISHNAGIRI INCIDENT POLICE INVESTIGATION

தங்களின் தவறான தொடர்புக்கு வடிவேல் இடையூறாக நிற்பதால் அவரைத்தீர்த்துக்கட்டிவிட ஆஷாவும், மணிகண்டனும் திட்டமிட்டனர். இதையடுத்து ஏப்ரல் 4ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலை, இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தனர்.

வழக்கமாக அதிகாலை 03.00 மணியளவில்,பால் வாங்குவதற்காக எழுந்து வரும் வடிவேல், மறுநாள் காலையில் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.அவர் கொல்லப்பட்டது குறித்து அறிந்த அப்பகுதியினர்,இதுகுறித்து மஹாராஜாகடை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

காவல்துறை விசாரணையில் பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன.வடிவேலும், ஆஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இனிப்பு பலகாரம் தயாரிக்கும் கடைக்கு வேலைக்குச் சென்று வந்த வடிவேல்,அடிக்கடி வேலை காரணமாக அங்கேயே இரவில் தங்கி விடுவாராம்.அந்த இடைவெளியில்தான் ஆஷாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

http://onelink.to/nknapp

அவர்களின் நெருக்கத்தை அறிந்து கொண்ட வடிவேல்,மனைவியைக் கண்டித்துள்ளார்.அதனால்தான் ஆஷாவும், அவருடைய ஆண் நண்பரும் வடிவேலை அடித்துக் கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வடிவேலை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்ததை ஆஷாவும், மணிகண்டனும் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களைக்காவல்துறையினர் கைது செய்தனர்.

incident Krishnagiri Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe