கிருஷ்ணகிரி வெடி விபத்து; உயிரிழப்பு உயர்வு; டிஐஜி நேரில் ஆய்வு

 Krishnagiri blast; Casualties rise to 6

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது சம்பவ இடத்திற்கு டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Krishnagiri police rescued
இதையும் படியுங்கள்
Subscribe