Krishnagiri incident 17 age old boy women

கிருஷ்ணகிரி அருகேயுள்ள பன்னந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்பவர் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது அங்கு மது போதையில் வந்த 17 வயது சிறுவன் அவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டுள்ளான். அதற்கு பச்சையம்மாள் இல்லை என கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் அவரை வசைபாடியுள்ளான்.

Advertisment

இது இருவருக்கும் இடையில் தகராறாக மாறியுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அச்சிறுவன் தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துவந்து அந்த பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

Advertisment

இதில் பச்சைம்மாளின் கழுத்து, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனே பச்சையம்மாளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை தேடிவருகின்றனர்.