krishnagiri husband and wife incident due boyfriend issue 

கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தட்டக்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 35). டைல்ஸ் கற்கள் வியாபாரியான இவர் சரக்கு வாகனம் ஒன்றையும் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்திவ்யா (வயது 27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைகாதலித்துதிருமணம் சித்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கந்தன் வாடகை வண்டியை ஓட்டுவதற்காக அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளார். இதற்கிடையில், திவ்யாவிற்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசக்தி (வயது 23) என்பவர் பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதனால்இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் மூலம்பேசி வந்துள்ளனர். இது குறித்து அறிந்த கந்தன் திவ்யாவை கண்டித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூருக்கு வாடகைக்கு செல்வதாகக் கூறிவிட்டு கந்தன் சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டுவீட்டை விட்டுச் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து திவ்யா,சிவசக்தியை தொலைபேசி மூலம் அழைத்து இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது வேலையின்றி வீட்டிற்குத்திரும்பிய கந்தன், திவ்யாவும் சிவசக்தியும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், திவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுஅவரை அடித்துள்ளார்.

இதனால்ஆத்திரமடைந்த திவ்யாவும்சிவசக்தியும் சேர்த்து வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கந்தனின் கண்ணில் தூவி உள்ளனர். மேலும், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கந்தனின் கழுத்தில் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கந்தன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.