krishnagiri govt mens arts college incident 

Advertisment

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில்முதலாம் ஆண்டு பி.ஏ. பயின்று வரும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் லிங்கேஸ்வரன் என்பவர் காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோர்களிடமும் கூறியுள்ளார். மேலும் இதே கல்லூரியில் மாணவியின் உறவினரான சின்ன திருப்பதி என்பவரும் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இரு மாணவர்களிடையே ஏற்கனவே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று, கல்லூரிக்கு முன்பு லிங்கேஸ்வரன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சின்ன திருப்பதியைகண்ட லிங்கேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சின்ன திருப்பதியின் கழுத்தை அறுத்து விட்டு ஓடி விட்டார், இதில் படுகாயம் அடைந்த சின்ன திருப்தியைமீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி முன்பு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.