Advertisment

கிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் - எளிய மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை

po

கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமேனஅள்ளி, தேவிரஅள்ளி, பண்ணந்தூர் உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமது நிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஏழை எளிய மக்களின் விவசாய நிலங்களை ஊடறுத்து உயர் மின்கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

Advertisment

ஏழை மக்களுக்கென இருக்கும் கொஞ்சம்நஞ்ச விவசாய நிலங்களிலும் மின் கோபுரங்களை அமைத்துவிட்டால் வாழ்வாதாரத்துக்கு எங்கே செல்வது என அச்சம் தெரிவித்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலத்தை அபகரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அப்பாவி மக்கள் அவர்களது நிலங்களிலேயே பெண்கள், குழந்தைகளோடு முகாமிட்டு வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள். ஊடக வெளிச்சத்துக்கு வராத எளிய மக்களின் இப்போராட்டத்தை ஒடுக்க காவல்துறை தனது முழு பலப்பிரயோகத்தையும் செலுத்தி வருகிறது.

குடிமேனஅள்ளி, தேவிரஅள்ளி, பண்ணந்தூர் மற்றும் அதன் அண்மித்த கிராமங்களில் மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், ஆயுத படையினரும் இறக்கப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கையாளப்பட்ட வழிமுறையைப்போல், படையினரைக்கொண்டு போராடும் மக்களை அச்சுறுத்தும் கொடுமை இக்கிராமங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தமது சொந்த நிலங்களில் கூடியிருக்கும் மக்களையும் காவல்துறையினர் அங்கிருந்து விரட்டியடித்து வருகிறார்கள். சொந்தநிலத்திலிருந்து அம்மக்களையே அகதிகளைப்போல் விரட்டியடிக்கும் செயல்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமலும்,

நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான படையினர் கண்ணீர் புகைகுண்டு வாகனங்களோடு பாதிக்கப்பட்ட மக்களினது கிராமங்களில் நுழைந்து அச்சுறுத்தல் செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய மக்கள் விரோத செயல்கள் அரங்கேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் நடைபெறும் அக்கிரமங்கள் தமிழகத்தின் அடுத்த மிக முக்கிய பிரச்சனையாக அணுகவேண்டிய அவசியத்தை கொண்டிருக்கிறது.

Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe