Skip to main content

லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் கைது!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
K

 

கிருஷ்ணகிரியில் கடை ஒதுக்கீடு செய்வதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட திட்ட அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (49). இவர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்லம் மண்டி நடத்தி வருபவர் ஜெயக்குமார்.   இவர், அங்குள்ள நூலகம் எதிரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடத்தில் தனக்கும் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்கித் தருமாறு விண்ணப்பித்து இருந்தார். கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கிளர்க் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

 

நரசிம்மன்

nadarajan


அவரிடம் பணம் கொடுக்க சம்மதம் என அப்போது ஜெயக்குமார் ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்லை. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.   அதன்படி போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயக்குமாரிடம் கொடுத்து, அந்தப்பணத்தை கிளர்க்கிடம் கொடுக்குமாறு திட்டம் வகுத்துக் கொடுத்தனர். 


இதையடுத்து, ஜெயக்குமார் இன்று மாலை (செப்டம்பர் 7, 2018) மணியளவில் பணத்துடன் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குச் சென்றார்.¢ அங்கு கிளர்க் சத்தியமூர்த்தியிடம் பணத்தைக் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் திட்ட அலுவலரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து நரசிம்மனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த கிளர்க் சத்தியமூர்த்தியையும் கைது செய்தனர்.   தொடர்ந்து இரவு 10 மணியைக் கடந்தும் அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்கட்சியினரை மூக்குடைக்கும் திமுக எம்.எல்.ஏ. –இளைஞர்களை கவரும் ஊராட்சி கூட்டம்

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
k


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமார், 9ந்தேதி ஊராட்சி கூட்டத்தை தொடங்கினார். தினசரி 3 ஊராட்சிகள் மட்டும்மே என கணக்கு வைத்துக்கொண்டு கூட்டம் நடத்துகிறார். கழனிப்பாக்கம், கந்தனேரி உட்பட இதுவரை 6 ஊராட்சியில் ஊராட்சி சபா கூட்டத்தை நடத்தியுள்ளார்.


பொங்கல் விழாவை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்து மக்களுக்கு நெருக்கடி தரக்கூடாதென தயங்கி ஊராட்சி சபா கூட்டம் நடத்துவதை நிறுத்திவைத்தார். பொங்கல் முடிந்ததும் மீண்டும் ஊராட்சி சபா கூட்டம் தொடங்கியுள்ளார்.


ஊராட்சி சபா கூட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து முதலில் அவர்களிடம் மைக் தந்து குறைகளை கேட்பவர், அடுத்து இளைஞர்கள், இறுதியில் ஆண்கள் என அந்த கிராமத்தில் உள்ள குறைகளை கேட்கிறார். கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபால் டீம் இளைஞர்கள் விளையாட்டு பொருள் தேவை என கோரிக்கை வைத்தனர் எம்.எல்.ஏவிடம். கந்தனேரி கபடி டீம் இளைஞர்களும் அதே கோரிக்கையை வைத்தனர். இவர்கள் கேட்பதை பார்த்து எட்டவாது, பத்தாவது, 11வது படிக்கும் பொடிசுகளும் ஒரு பட்டியல் தந்து அண்ணனுங்க எங்களை விளையாட்டுல சேர்ந்துக்கமாட்டேன்கிறாங்க. அதனால் அவுங்களுக்கு வாங்கி தர்றமாதிரி எங்களுக்கும் வாங்கி தாங்க சார் என கோரிக்கை வைத்தனர்.


அந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்த்த எம்.எல்.ஏ நந்தகுமார், உடனடியாக கிரிக்கெட் மட்டை, பந்து, நெட், பேட், வாலிபால், டென்னிஸ் பேட் என 5 செட் வாங்கி அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கியுள்ளார். இதனைப்பார்த்து அந்த கிராம பெண்கள் சந்தோஷமாகி, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைங்க தலைவரே என கோரிக்கை வைத்தனர். நிச்சயம்மாக, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொவை, முதியோர் உதவித்தொகை வாங்கி தர நிச்சயம் முயற்சி செய்கிறேன் என வாக்குறுதி தந்துவிட்டு வந்தார்.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார், ஊராட்சி சபா கூட்டத்திற்கு பெரும்பாலும் வாயதானவர்கள் அதிகளவில் வந்து முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தேன் தரமறுக்கிறார்கள், வந்துக்கொண்டுயிருந்த உதவித்தொகை வரவில்லை என்பதே 50 சதவித புகார்களாக உள்ளது. அதற்கடுத்து வீட்டுமனைப்பட்டா வேண்டும் என்பதும், சாலை வசதி வேண்டும் என்பதாகும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தரும் கோரிக்கை மனுக்களை பைல் செய்து வகை பிரிக்கிறோம். கோரிக்கைகளில் என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்த பொருட்கள் வாங்கி தருவது, கோயில் கட்டிதருவது, சீரமைப்பது, விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பு, தண்ணீர் டேங்க் அமைத்தல் போன்றவற்றை செய்கிறேன், அரசாங்கத்தால் தான் செய்ய முடியும் என்பதை தனியாக எடுத்து வைத்துள்ளேன். மக்கள் சந்திப்பு முடிந்தபின் மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போகிறேன் என்றார் அதிரடியாக.


அரசாங்கம் நடத்த சொல்ற, அதிகாரிகள் வந்து கலந்துக்கற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்களால் வைக்கப்படும் கோரிக்கைக்கே எந்த நடவடிக்கையும் இல்லை. இதில், எதிர்கட்சியான திமுக நடத்தற கிராமசபா கூட்டத்தால் விடிவு வந்துடுமா என ஆளும்கட்சியான அதிமுக, பாஜக உட்பட சில கட்சியினர் திமுகவினரை பார்த்து நக்கலடிக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் திமுக எம்.எல்.ஏ கிராமசபா கூட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றி பகடி பேசுவர்களுக்கு பதிலடியை தந்துவருகின்றனர்.

Next Story

  இந்திய அளவில் முதலிடம்! விருதுபெற்ற விருதுநகர் மாவட்டம்! -இந்த நேரத்தில் இது வேறயா?

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
k

 

மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு,   இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத்துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர்.

 

 கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து முன்னேற்றம் காட்டி வருவதாகவும், அடிப்படை உட்கட்டமைப்பு, கல்வி என அனைத்திலும் நன்கு முன்னேறிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. 

 

v


புதுடில்லியில் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, அதற்கான பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியமைக்காக, மாற்றத்தின் வெற்றியாளர் விருது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்

 

துக்கு வழங்கியிருக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.  
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள், தானமாகப் பெறப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அலட்சியமாக நடந்துகொண்டு,  கர்ப்பிணிப் பெண்ணுக்கு  எச்.ஐ.வி. தொற்றினை ஏற்படுத்தி, தமிழக மக்கள் விருதுநகர் மாவட்டத்தை ஒரு தினுசாகப் பார்க்கின்ற நிலையில், பால் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஆகியோருடன் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம். 

ரோமாபுரி நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். இது ஏனோ நம் நினைவுக்கு வந்து தொலக்கிறது.