Skip to main content

கிருஷ்ணசாமி, கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம்!

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
kannan

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(8.5.2018) அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முன்னதாக நீட் கொடுமையினால் உயிரிழந்த கிருஷ்ணசாமி, கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையான “நீட்"" தேர்வினை எல்லா வகை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து, வேறு வழியின்றி நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், முன்கூட்டியே முறையாகத் திட்டமிடப்படாத குழப்பத்தின் உச்சகட்டமாக, கேரள மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும், சிக்கிம் மாநிலத்திலும் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய இளநிலை பள்ளிக் கழகம் (சி.பி.எஸ்.இ) எதிர்பாராததொரு தாக்குதலை தமிழக மாணவர்கள் மீது தொடுத்து எவராலும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது.  மத்திய அரசின் இந்த துரோகச் செயலுக்கு அ.தி.மு.க. அரசு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல்,  மத்திய அரசின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது.

 

அந்த துரோகத்தின் விளைவாகவும், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதாலும், சி.பி.எஸ்.இ விதித்த அவமானப்படுத்தும் கெடுபிடிகளாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும், மாணவ- மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். நீட் தேர்வு மன உளைச்சலின் காரணமாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் - கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனிவாசன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்ததை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

 

 இவர்களது துயர மரணத்திற்கும் - அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020


 

 Famous cinematographer Kannan incident chennai

இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றழைக்கப்பட்ட திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் (69 வயது) காலமானார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. 
 


'அலைகள் ஓய்வதில்லை', 'மண்வாசனை', 'முதல் மரியாதை' என பாரதிராஜாவின் பல படங்களில் பணியற்றியுள்ளார். பாரதிராஜாவின் பல திரைப்படங்களில் தமது கலைவண்ணத்தைக் காட்டியவர் கண்ணன். 

மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனாவார். அதேபோல் மறைந்த கண்ணனின் சகோதரரான எடிட்டர் பி.லெனினும் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

Next Story

கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கண்ணன் உடல் வியாழக்கிழமை தகனம்.

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

கேரளாவில் கடந்த மாதம் 28 ந் தேதி திங்கள் கிழமை அதிகாலை அமைதி பள்ளத்தாக்கு காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் சேலம் மாணிவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தான் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து- மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.

kerala forest incident kannan police


கண்ணன் (எ) கார்த்திக் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே தந்தையின் கொள்கையால் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்து டைஃபி கிளையையும் தொடங்கி 3 வருடம் செயலாளராக இருந்துள்ளார். அதன் பிறகு காவிரிப் பிரச்சணையில் கம்யூனிஸ்ட்களின் முடிவில் திருப்தி இல்லாததால் அதிலிருந்து விலகி, பொதுப் பிரச்சணைகளில் பங்கெடுத்து தீர்த்து வைத்தார். பல முறை ரத்த தானம் முகாம் நடத்தியவர்.

kerala forest incident kannan police


2006 ம் ஆண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற போது 2007 ல் 6 மாவோயிஸ்டுகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு 3 வருடம் சிறை வாசம். ஒரிசா வரை அழைத்துச் செல்லப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமின் கையெழுத்து போட சென்னையில் அனுமதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்ட போது தேனி, திண்டுக்கல் என்று அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே அவரது முடிவுகள் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துவிட்டேன். இனி அப்படியே மாறிவிடுகிறேன் என்று மாவேயிஸ்ட்களுடன் சென்றுவிட்டார். அதன் பிறகு அதாவது 2010க்கு பிறகு குடும்பத்தினருடன் தொடர்புகள் இல்லை. 

kerala forest incident kannan police

அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் குடும்பம் புதுக்கோட்டை மாவடத்தில் சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் தான் தற்போது கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. தகவல் அறிந்து தாய் மீனா, அண்ணன் முருகேசன் ஆகியோர் கேரளா சென்று சடலத்தை அடையாளம் காண சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். நீதிமன்றம் உத்தரவை பெற்ற சடலத்தை அண்ணன் முருகேசன் மட்டும் பார்த்தவர் உடல் சிதைந்துள்ளது அதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அதனால் அடுத்தடுத்து 3 முறை நீதிமன்ற உத்தரவால் 12 ந் தேதி வரை சடலத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரனைக்கு போய் உள்ளது.
 

இந்த நிலையில் தான் சேலம் மணிவாசகம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய தேவையான பாதுகாப்புகளை நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு சிலர் சொந்த ஊருக்கு கொண்டு வர அனுமதிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தன்ர்.

kerala forest incident kannan police

அதே போல கண்ணன் (எ) கார்த்திக் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கேரளாவில் திருச்சூரிலேயே தகனம் செய்யும் முடிவில் உறவினர்கள் சென்றனர். ஆனால் கேரள அதிகாரிகள் அங்கு உடல் தகனம் செய்ய அனுமதிக்காமல் சொந்த ஊரில் தகனம் செய்ய பாதுகாப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் சொந்த ஊரில் தகனம் செய்ய பிரச்சனைகள் வரலாம் என்பதால் திருச்சி மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்வோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. 
 

அதற்கு புதுக்கோட்டையில் தகவம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்ட போது புதுக்கோட்டையில் மின் மயானம் இருந்த போதிலும் அங்கே மின் மயானம் இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டு திருச்சியில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்கள். அதனை ஏற்றுக் கொண்டனர் உறவினர்கள். ஆனால் திருச்சி வேண்டாம் கோவையில் தகனம் செய்யலாம் என்றும் அதிகாரிகள் சடலத்தை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டுள்ளனர். வியாழக்கிழமை (14/11/2019) அதிகாலை மாவோயிஸ்ட் கண்ணன் (எ) கார்த்திக் உடல் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியா? கோவையா, புதுக்கோட்டையா? அல்லது வேறு இடமா என்பது அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.