சென்னை கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது வாலிபர் விக்னேஷ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர் காதலித்து வந்த பெண்ணுக்குகணேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இதை கண்டிப்பதற்காக விக்னேஷ் ஒரு திட்டம் போட்டான். அதவாதுசம்பந்தப்பட்ட நபரானகணேஷை அழைத்து மது அருந்தலாம் என கூறிவிட்டு அழைத்துச்சென்று இருவரும் மது அருந்திவிட்டு பைக்கில் சென்றுள்ளனர். கோயம்பேடுமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்பக்கம்அமர்ந்திருந்த விக்னேஷ் கணேஷின்விலா எலும்பில் கத்தியால் குத்திவிட்டுவண்டியிலிருந்து எகிறிக்குதித்துஇறங்கியுள்ளான்.இதனால் பைக்கை தாருமாறாக செலுத்திய கணேஷ் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனையடுத்து போலீசார் இது விபத்து எனக்கருதி மருத்துவமனைக்கு கணேசின் உடலைஅனுப்பிவைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் கணேசன் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தால் இது விபத்தல்ல கொலை என கருதி கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் அந்த கொலைவழக்கின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஷ் கைது செய்யப்பட்டான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கைது செய்யப்பட்ட விக்னேஷ் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் கடந்த வியாழனன்றுவெளிவந்துள்ளார். கோயம்பேடு மேட்டுக்குளம்மைதானத்தில் தனது நண்பர்களுடன் இருந்த விக்னேஷைகொலை செய்யப்பட்ட கணேஷின்தம்பி பிரகாஷ் தாக்குவதற்காக தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்த மைதானத்திற்கு வந்துள்ளான். மைதானத்துக்கு வந்த பிரகாஷ் மற்றும் அவன்நண்பர்கள் விக்னேஷைசரமாரியாக வெட்டிகொலை செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் விக்னேஷைகொலை செய்த பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.