இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட சமூக இடைவெளியின்றி கோயம்பேடு மார்கெட்டில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய 121 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
தற்போது கோயம்பேடு மார்கெட்டில் இருந்து விழுப்புரம் வந்த மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பு எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.