கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் இன்றே மளிகை கடைகளிலும், காய்கறி மார்கெட்டிலும் குவிந்தனர்.சென்னையின் முக்கியமான காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தையில் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள் பெருமளவில் திரண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.