Advertisment

நாளை முதல் 144 தடை : பயணிகள் கூட்டத்தால் திணறும் கோயம்பேடு..! (படங்கள்)

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 144 தடை உத்தரவு நாளை மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் இன்று இரவே சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு புறநகர் பேருந்துநிலையத்தில் பெருமளவு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே, பேருந்து சேவை 40% குறைக்கப்பட்ட நிலையில் போதுமான பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.

koyambedu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe