திருச்சியில் இருந்து சென்னை வந்த அரசுப் பேருந்து கோயம்பேட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் இன்ஜினிலிருந்து கரும்புகை கிளம்பியதும் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், அவர்கள் உயிர் தப்பினர். தகவலறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக, சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.