தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில், சென்னையின் முக்கிய கடை விதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தை, மாதாவரம் பழச்சந்தை ஆகிய பகுதிகளில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழ சரக்குகள் வரவும் அவற்றை வாங்க கூவிந்த மக்கள் கூட்டத்தாலும் பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும், பண்டிகை காலங்களில் காரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதை மறந்து பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியின்றியும் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.