style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த 2016ம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர் சங்கரும்,கவுசல்யாவும் அதைத்தொடர்ந்து திருப்பூர் உடுமலையில் கூலிப்படை மூலம் அவர்களைக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுசல்யா பலத்த காயமடைந்தார். உடல்நலம் பெற்றுவந்த கவுசல்யா ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு போன்ற சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அண்மையில் சக்தி என்பவரை மணந்தார்.
இந்நிலையில்ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் சொந்த ஊரான குமாரலிங்கத்தில் உள்ள சிலர்கவுசல்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கவுசல்யா வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க காவல்துறை அனுமதியளிக்கக்கூடாது. சங்கரின் இரத்தம் காய்வதற்குள் கவுசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இனி தொடரக்கூடாது என்றும் தீர்மானம் போட்டுள்ளனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.