Skip to main content

போலீசார் தாக்கியதில் காயம் உள்ளதா..? கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்ட்ரேட் நேரில் ஆய்வு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
magistrates

 

முதல் நாள் இரவில் மகனும், மறுநாள் அதிகாலையில் தந்தையும் மர்மமான முறையில் இறக்க, போலீசார் தாக்கியதாலே இந்த இரு மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றது என காவல்துறைக்கு எதிராக சாத்தான்குளம் பகுதி மக்கள் போராட்டத்தினை நடத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் கூறுவதுபோல், இறந்த இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் காயங்கள் இருக்க வாய்ப்புண்டு என இரு உடல்களிலும் காயங்கள் இருக்கின்றனவா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார் கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்ட்ரேட்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜர் சிலை வடக்குபுறத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பென்னிக்ஸ். ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தாண்டியும் கடை திறந்திருப்பதாகக் கூறி, கடந்த சனிக்கிழமையன்று இவரையும், இவரது தந்தையான பனைமர வியாபாரி ஜெயராஜையும் அழைத்து சென்று சாத்தான்குளம் காவல் நிலையத்தார் தாக்கி வழக்கு பதிந்து கோவில்பட்டி சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது. காயங்கள் மிகுந்த தந்தை ஜெயராஜ் காவல் பாதுகாப்புடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கிளை சிறையிலிருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதே வேளையில் இன்று அதிகாலையில் மருத்துவமனையிலிருந்த தந்தை ஜெயராஜூம் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில், எஸ்.ஐ.-க்கள் பாலகிருஷ்ணனும், ரவிகணேஷ் உள்ளிட்ட சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாலே இவர்கள் இருவரும் இறந்துள்ளனர் எனவே, இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் இறப்பிற்கு நியாயம் கேட்டு கடையடைப்பை நடத்தினர் சாத்தான்குளம் பகுதி மக்கள்.

இதே வேளையில், மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பிண பரிசோதனை பிரிவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இந்நிலையில், தாக்கிய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இருவரின் பிணத்தையும் வாங்குவோம் என உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில், காவல்துறை தாக்கியதில் உடல்களில் ஏதேனும் காயம் உள்ளதா என்பது குறித்து அறிய, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள பிரேத பரிசோதனை மையத்திற்கு சென்று உடல்கள் இரண்டையும் ஆய்வு செய்துள்ளார் கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்ட்ரேட்டான பாரதிதாசன். எனினும், இப்பகுதியில் பதட்டம் தனியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

“செல்போனை ஒட்டுக் கேட்பது குற்றவாளிகள் செய்யும் செயல்” - ராகுல்காந்தி எம்.பி.

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.

 

இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.